கனடா நெடுஞ்சாலையில் இருவேறு விபத்து: இருவர் பலி .

கனடாவில் நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மணிடோபா மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலை 13-ல் நேற்று அதிகாலை 1.20 மணிக்கு மினி பொலிசார் நடத்திய விசாரணையில் ஓட்டுனர் சீட் பெல்ட் அணியாததும், மது அருந்தியிருந்ததும் தெரியவந்தது. லொறி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்த நிலையில் சாலையில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் லொறியில் இருந்த 43 வயதான ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் நடந்து 2 மணி நேரம் கழித்து நெடுஞ்சாலை 6-ல் கார் ஒன்றில் 24 வயதான பெண்ணும், 30 வயதான ஆணும் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிரில் வந்த ஒரு மினி லொறி கார் மீது மோதியதில் உள்ளிருந்த ஆண் பரிதாபமாக உயிரிழந்தார். பெண்ணுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து கார் மீது மோதிய லொறி ஓட்டுனர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.