India

கவர்னரை பார்த்து ஜெயலலிதா கை அசைக்கவில்லை: டாக்டர் சிவக்குமார் அளித்த வாக்குமூலத்தால் பரபரப்பு.

சென்னை: அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை கவர்னர் பார்த்தார். ஆனால், அவரை ஜெயலலிதா பார்க்கவில்லை. அதே போன்று அமைச்சர்கள் யாரும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்று ஜெயலலிதா குடும்ப டாக்டர் சிவக்குமார் விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து தமிழக அரசு சார்பில் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் பல்வேறு தரப்பை சேர்ந்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து அவரின் குடும்ப டாக்டர் சிவக்குமாரிடம் விசாரிக்க ஆணையம் முடிவு செய்தது. இதை தொடர்ந்து, கடந்த ஜனவரி 8ம் தேதி சசிகலா உறவினரும், ஜெயலலிதாவின் குடும்ப டாக்டருமான சிவக்குமாரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார். அப்போது, சிவக்குமார் விசாரணையின் போது கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதனால், விசாரணையை நீதிபதி ஆறுமுகச்சாமி தள்ளி வைத்தார்.

இதை தொடர்ந்து சிவக்குமார் மார்ச் 14ம் தேதி மீண்டும் ஆஜரானார். அப்போது நடந்த விசாரணையில் சிவக்குமார், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பே காய்ச்சல் இருந்தாக கூறினார். 2016 செப்டம்பர் 22ம் தேதி திடீரென பாத்ரூமில் ஜெயலலிதா மயங்கி விழுந்தார். அவரது உடலில் எந்தவித அசைவும் இல்லை. அவரது உடல் நிலை மோசமான நிலையில் இருந்ததால் தான் அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று வாக்குமூலம் அளித்தார். சிவக்குமார் செப்டம்பர் 26ம் தேதி வரை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை ஆணையத்தில் விளக்கம் அளித்திருந்தார். அவரிடம் விசாரணை முழுமை பெறாத நிலையில் மீண்டும் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்தது.இதை தொடர்ந்து கடந்த வாரம் அவரை 3வது முறையாக விசாரணை ஆணையத்தில் ஆஜராக நீதிபதி சம்மன் அனுப்பினார். அதன்பேரில் நேற்று மதியம் 2 மணியளவில் சிவக்குமார் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நீதிபதி விசாரணை நடத்தினார்.
அப்போது, செப்டம்பர் 26ம் தேதிக்கு பிறகு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன என்பன உள்பட மருத்துவம் தொடர்பான அனைத்து கேள்விகளையும் கேட்டார். அதற்கு டாக்டர் சிவக்குமார் பதில் அளித்தார். அதை நீதிபதி வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டார்.

விசாரணை முடிந்து வெளியே வந்த டாக்டர் சிவக்குமார் நிருபர்களிடம் கூறும் போது, குறுக்கு விசாரணைக்கு மீண்டும் வர வேண்டும் என்று கூறியுள்ளனர். என்னிடம் விசாரணை முடிந்ததாக ஆணையம் தெரிவித்துள்ளது’ என்றார். ஆணையத்தில் சிவக்குமார் அளித்த வாக்குமூலம் குறித்து விசாரணை ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் சிவக்குமார் மட்டுமே உடன் இருந்ததாக தெரிவித்தார். தினந்தோறும் அவர் ஜெயலலிதாவை நேரில் பார்த்து வந்ததாகவும் கூறினார். ெசப்டம்பர் 27ம் தேதி காவிரி விவகாரம் தொடர்பாக ஜெயலலிதா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது, அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார். அன்றைய இரவே அவருக்கு உடல் நிலை மோசமானதாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு நோய் தொற்று ஏற்பட்டதால் அதன் பிறகு அவரை யாரும் சந்திக்க அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா அழைத்தால் மட்டுமே சசிகலா அவரது அறைக்கு செல்வாராம். அவருக்கு டிரக்யோஸ்டமி கருவி பொருத்தப்பட்டிருந்தால் அவர் சசிகலாவை அழைக்கும்போது, எஸ் என்று எழுதி குறிப்பிடுவார். அதன்பிறகு சசிகலாவை அறைக்குள் அனுமதிக்கப்படுவார் என்று கூறினார். தொற்று ஏற்படக்கூடாது என்பதால் பிரத்யேக ஆடையில் தான் சசிகலா ஜெயலலிதா அறைக்கு செல்வார். தினமும் ஒரு முறையாவது சசிகலா ஜெயலலிதா அறைக்கு வருவார். நான் தினந்தோறும் ஜெயலலிதாவை சந்திப்பேன் என்று கூறினார்.

ஜெயலலிதா அறை மாற்றும் போதும், ஸ்கேனுக்கு கொண்டு செல்லும் போது அமைச்சர்கள் யாரும் அவரை பார்க்கவில்லை என்று தெரிவித்தார். ஆங்காங்கே ஒரு மூலையில் அமைச்சர் நின்று கொண்டு இருந்தனர். ஆனால், அமைச்சர் நிலோபர் கபில் மட்டும் தடையை மீறி போய் நெருக்கமாக ஜெயலலிதாவை பார்த்தார் என்று சிவக்குமார் நீதிபதியிடம் கூறினார்.
கவர்னர் வித்யாசாகர் ராவ் ஜெயலலிதாவை பார்க்க மருத்துவமனைக்கு வந்தார். அப்போது ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் பிசியோதெரபிஸ்ட் சிகிச்சை கொடுத்தார். ஜெயலலிதாவுக்கு டிரக்யோஸ்டமி பொருத்தப்பட்டிருந்ததால் அவரால் கழுத்தை திருப்ப முடியாது. அப்போது, ஜெயலலிதா அறையில் பிசியோதெரப்பிஸ்ட் நேராக பார்த்தபடி பந்து ஒன்றை ஜெயலலிதாவிடம் தூக்கி போட்டார். அந்த பந்தை ஜெயலலிதா மீண்டும் பிசியோதெரபிஸ்டைநோக்கி தூக்கி போட்டார். இந்த முறையில் ஜெயலலிதாவுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, கவர்னர் ஜெயலலிதாவை கண்ணாடி வழியாக பார்த்தார். அப்போது நான் உடன் இருந்தேன் என்றும் கூறினார். ஆனால், கவர்னரை ஜெயலலிதா பார்க்கவில்லை என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார். டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டது. அப்போது, முதலில் நெஞ்சை அழுத்தி இதய துடிப்பு வருகிறதா என்று பார்த்தனர். அதன்பிறகு, அவருக்கு ஷாக் டீரிட்மென்ட் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அப்போது இதயத்தை பம்பிங் செய்து துடிக்க வைக்க டாக்டர்கள் பார்த்தனர். ஆனால், இதயம் துடிக்கவில்லை. அதன்பிறகு எக்மோ கருவி பொருத்தப்பட்டது. அதன்பிறகும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. டிசம்பர் 5ம் தேதி எக்மோ கருவி பொருத்தி பயன் இல்லை. எனவே, அதை அகற்றி விடுமாறு எய்ம்ஸ் டாக்டர்கள் தெரிவித்தனர். அதன்பிறகே எக்மோ கருவி அகற்றப்பட்டது என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இவ்வாறு ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.சசிகலா தனது பிரமாண வாக்குமூலத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சிலர் ஜெயலலிதாவை பார்த்ததாக கூறினார். ஆனால், அவரது உறவினர் சிவக்குமார் ஜெயலலிதாவை அமைச்சர்கள் யாரும் பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கவர்னர் வித்யாசாகர் ராவ் கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்ததாகவும், அவர் கையை உயர்த்தி காட்டியதாகவும் தெரிவித்தார். இது குறித்து அவரது புத்தகத்தில் கவர்னர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், நேற்று சிவக்குமார் அளித்த வாக்குமூலத்தில் கவர்னர் தான் ஜெயலலிதாவை பார்ததார். ஜெயலலிதா கவர்னரை பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால், விசாரணை ஆணைய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சசிகலா தனது வாக்குமூலத்தில், ெஜயலலிதாவை கவர்னர் சந்தித்து பேசினார் என்று கூறியிருந்தார். அமைச்சர்களும் அவரை சந்தித்தனர் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் சசிகலாவின் உறவினரும், ஜெயலலிதாவின் டாக்டருமான சிவக்குமார் வாக்குமூலம் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னிச்சையாக அதிமுகவைபங்கு போட்டனர்
ஜெயலலிதா குடும்ப டாக்டர் சிவக்குமார் அளித்த வாக்குமூலத்தில், 2011க்கு பிறகு கட்சியின் செயல்பாடுகள் வளர, வளர சசிகலா குடும்பத்தினர் தானாகவே கட்சி பொறுப்புகளை பகிர்ந்து கொண்டனர். கட்சி விவகாரங்களில் கவனம் செலுத்தி வந்த அவர்கள், நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்’ என்றும் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக கூறப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top