காணாமல் ஆக்கப்பட்டோரை ஒப்படைப்போமென எந்தவொரு உத்தரவாதமும் வழங்க முடியாது!!

காணாமல் ஆக்கப்பட்டோ ரின் உறவுகளைக் கொண்டு வந்து உங்களிடம் நான் ஒப்படைப் பேன் என்று என்னால் எந்த உத் தரவாதமும் வழங்க முடியாது. இந்தப் பணிய கத்தின் ஊடாக உச்சபட்சமாக எதைச் செய்ய முடி யுமோ அதைச் செய்வேன்.காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த காலத்தில் நடத் தப்பட்ட விதம் தொடர்பில் மன் னிப்புக் கோருகிறேன்.
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட் டோர் பணியகத்தின் ஆணையா ளர் சாலிய பீரிஸ் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை நேற்று நேரில் சந்தித்து உரையாற்றியபோதே மேற்கண்ட வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்தப் பணியகம் நிரந்தரமானது. இந்த ஆணையாளர்கள் 3 ஆண்டுகள்தான் இருப்பார்கள். அந்த மூன்று ஆண்டுகளுக்கு இடையில் எவற்றை எம்மால் செய்ய முடியுமோ அவற்றை நிச்சயம் செய்வோம்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அனுபவித்து வருகின்ற துன்ப துயரங்களை நேரடியாக உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இந்த மக்கள் பல்வேறு இடர்களுக்கு மத்தியிலும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்– என்றார்.
இதன் பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஆணையாளர் சாலிய பீரிஸிடம், தென்னாபிரிக்காவில் பெரும்பான்மை இனத்துக்கு எதிராக செயற்பட்ட சிறுபான்மை இனத்தை பெரும்பான்மை இனமே விசாரனை மேற்கொண்டதில் வெற்றியளித்தது. ஆனால் இங்கு சிறுபான்மை இனத்துக்கு எதிராக பெரும்பான்மை இனம் விசாரனை மேற்கொள்கின்றது. இங்கு வெற்றியளிக்கப்படும் என்று கருதுகின்றீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
‘நாம் இனத்தை மதத்தைக் கொண்டு இங்கு செயற்படவில்லை. நாம் அனைவரும் இலங்கையர் என்ற எண்ணத்துடனே செயல்படுகின்றோம். ஆரம்பத்திலிருந்து ஆணைக்குழுவை நோக்கினால் உங்களுக்கு புரியும். குறுகிய நோக்கம் கொண்டு செயல்படவில்லை. எங்களுக்கு சட்டத்திட்டங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. அதற்கமையவே நாங்கள் செயல்படுவோம். நாங்கள் பக்கச் சார்பாகவோ அல்லது இனம் மதம் பார்த்தோ செயல்பட போவதில்லை. 1987ஆம் ஆண்டிலிருந்து 1989ஆம் ஆண்டு வரை பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமற் போயிருக்கின்றார்கள். அது ஒரு இனமாக கருதப்பட்டாலும் நாங்கள் அதை ஒரு இனம் என்று பார்க்காது இது ஒரு தேசிய பிரச்சனை என்றுதான் பார்க்கின்றோம். எதிர்காலத்திலும் நாங்கள் இப்படியான கண்ணோட்டத்தில்தான் செயல்படுவோம். எதிர்காலத்தில் இவ்வாறான செயல்பாடு நடவாதிருக்கும் முகமாக நாம் இலங்கையர் என்ற நிலையிலே செயல்படுவோம்’ என்று பதிலளித்தார்.