News

கிம் – டிரெம்ப் சந்திப்பின் போது தென்கொரிய ஜனாதிபதியும் பிரசன்னமாக வாய்ப்பு ?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரெம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் யொங் உன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இடம்பெற்றால், அதன்போது தென் கொரிய ஜனாதிபதி முன் ஜே- இன் கலந்து கொள்வாரென செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா – வட கொரியா உச்சிமாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் வடகொரியா விரோதத்தை வெளிப்படையாக வெளிப்படுத்துவதாகத் தெரிவித்து குறித்த பேச்சுவார்த்தையை இரத்துச்செய்தார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரெம்ப்.

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் வட கொரிய தலைவர்கள் சந்திக்கவுள்ள உச்சிமாநாட்டை திட்டமிட்டபடி முன்னெடுக்க தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருப்பதை பொறுத்தே தென்கொரிய ஜனாதிபதி முன் ஜே-இன் கலந்து கொள்வாரா இல்லையா என்பது தெரியவரும்.

சிங்கப்பூரில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றால் அமெரிக்க ஜனாதிபதி வட கொரியத் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அதுவே முதல்முறையாக இருக்கும்.

இதேவேளை, உச்சிமாநாட்டிற்கு ஏற்பாடுகள் செய்ய, அமெரிக்காவில் இருந்து வட கொரியாவிற்கு அதிகாரிகள் குழு சென்றுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top