News

கிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினம் .

கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் இடம்பெற்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில், பல்வேறு பொது அமைப்புக்களின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்படன. கிளிநொச்சி முழங்காவில் விநாயகர் விளையாட்டு மைதானத்தில் குறித்த கூட்டம் நடைபெற்றறு.

நிகழ்வின் முன்னதாக நாச்சிக்குடா சந்தியிலிருந்து தொழிலாளர்களுக்கு எதிரான அடக்கு முறைகளை சித்தரிக்கின்ற ஊர்திகளுடன் பேரணியாக முழங்காவில் விநாயாகர் விளையாட்டுக்கழக மைதானத்தைச் சென்றடைந்து அங்கு மே நாள் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, சரவணபவன், சிவஞானம் சிறீதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, த.குருகுலராஜா, மற்றும் பச்சிலைப்பள்ளி, பூநகரி, கரைச்சி, ஆகிய பிரதேசசபைகளினுடைய தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.

புலிகளின் எழுச்சிப் பாடல்களுடன் வடமராட்சியில் கூட்டமைப்பின் மேதினப் பேரணி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பேரணி நெல்லியடி புதிய சந்தைப் பகுதியிலிருந்து இன்று பிற்பகல் இடம்பெற்றது. விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களுடன் ஆரம்பமாகிய பேரணியில் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

நெல்லியடி பொதுச் சந்தைக்கு அருகாமையிலிருந்து ஆரம்பமாக பேரணி அல்வாய் மைக்கல் விளையாட்டு அரங்கை சென்றடைந்ததை அடுத்து, அங்கு பொதுக்கூட்டம் இடம்பெற்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top