News

கிளிநொச்சியில் பிரதமர் ரணில் வழங்கிய வாக்குறுதி !

கிளிநொச்சிப் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள 500 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க
தெரிவித்தார்.


கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இராணுவம் வசமிருந்த 90 ஏக்கர் காணிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள காணிகளும் விரைவில் விடுவிக்கப்படும் எனவும் பிரதமர் இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.

வட மாகாண சபையுடன் இணைந்து செயற்படத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுநருடன் கலந்துரையாடி வேலைத்திட்டங்களை முன்னோக்கி கொண்டு செல்வதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை மீளவும் மக்களுக்கு வழங்குவதே முக்கிய விடயமாக உள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் மீள்குடியேற்றல் தொடர்பில் முதலாவதாக கவனம் செலுத்தவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டடம் நிர்மாணித்தல் மாத்திரமின்றி மக்களுக்கு பிரயோசமான முறையில் பொருளாதார உற்பத்திகளை அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என பிரதமரிடம் குறிப்பிடப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து வெளியிடும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top