News

குழந்தைகள் உள்பட 10 பேரின் தலையை துண்டித்து கொன்று பயங்கரவாதிகள் வெறிச்செயல்.

தெற்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் உள்ள கிராமம் ஒன்றில் போலீசுக்கு துப்பு கொடுத்ததால் குழந்தைகள் உள்ளிட்ட 10 பேரின் தலையை துண்டித்து பயங்கரவாதிகள் கொடூரமாக கொன்றுள்ளனர்.

தெற்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் உள்ள பால்மா என்ற கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் அப் சபாப் பயங்கரவாத குழு இயங்கி வருகிறது. பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்து பால்மா கிராம தலைவர் போலீசாருக்கு துப்பு கொடுத்து வந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த பயங்கரவாதிகள் சில நாட்களுக்கு முன்னர் கிராமத்துக்குள் நுழைந்து கிராம தலைவர் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 10 பேரை தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் குழந்தைகளும் அடக்கம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top