குவியல் குவியலாக கண்டெடுக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகளின் சடலம்: வெளியான காரணம் .

தெற்காசிய நாடான பாகிஸ்தானில் குப்பை மேடுகள் அருகே குவியல் குவியலாக பிஞ்சு குழந்தைகளின் சடலங்களை தொண்டு நிறுவன ஊழியர்கள் மீட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குப்பை மேடுகளில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் பெண் குழந்தைகள் என்பதும் கடந்த ஓராண்டில் மட்டில் 345 பிஞ்சு குழந்தைகளின் சடலங்களை மீட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் மிக பிரபலமான கராச்சி நகரிலேயே குறித்த கொடூரம் அரங்கேறியுள்ளது. மீட்கப்பட்ட சடலங்களில் 99 விழுக்காடும் பெண் குழந்தைகளின் உடல்களாகும். சில குழந்தைகளின் கழுத்து துண்டிக்கப்பட்டும் காணப்பட்டுள்ளது. மட்டுமின்றி பிறந்து சில நாட்களேயான குழந்தைகளை தவறான வழியில் பிறந்தது எனக் கூறி ஷரியா சட்டப்படி கல்லால் அடித்து கொலை செய்யும் கொடூரமும் சில கிராமங்களில் காணப்படுவதாக தொண்டு நிறுவன ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு மொத்தம், 70 பெண் குழந்தைகளை தவறான வழியில் பிறந்ததாக கூறி கல்லால் அடித்து கொன்றுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 23 சம்பவம் நடந்துள்ளது. ஆண் பிள்ளை மோகமே இதற்கு காரணமாகவும் கூறப்படுகிறது. பிஞ்சு குழந்தைகளை கொல்வது பாகிஸ்தானில் குற்றவியல் நடவடிக்கை என்றபோதும், ஏழ்மை, கல்வியறிவின்மை உள்ளிட்ட காரணங்களால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
ஆண் பிள்ளைகள் குடும்பத்தை காப்பார்கள் என்ற எண்ண ஓட்டமே பெரும்பாலும் பெண் குழந்தைகளை கொல்ல முக்கிய காரணமாக கருதப்படுகிறது. ஆனாலும் இதுவரை இந்த விவகாரம் தொடர்பில் எந்த வழக்கும் காவல் நிலையத்தில் பதியப்படாததால் விசாரணை நடைபெறவில்லை என பொலிசார் தெரிவிக்கின்றனர்.