News

கென்யாவில் அணை உடைந்து 41 பேர் பலி – நூற்றுக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கி மாயம்

கென்யாவின் நாகுரு பகுதியில் அணை உடைந்ததன் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் நாகுரு பகுதியில் உள்ள படேல் அணையில் நேற்று நள்ளிரவு திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள வீடுகள், விளை நிலங்கள் வெள்ளத்தால் மூழ்கின.

இதுவரை 41 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், பலர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. வீடுகளை இழந்தவர்கள் தற்போது தற்காலிக முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top