News

கோத்தபாயவை பாதுகாக்கும் மைத்திரி: விக்ரமபாகு கருணாரத்ன.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைதுசெய்ய மிகவும் தெளிவான காரணங்கள் இருப்பதாக கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். கோத்தபாயவை கைதுசெய்ய தெளிவான காரணங்கள் இருக்கும் போதும் அவர் கைதுசெய்யப்படுவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனைத் தடுத்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தவர்களை மாத்திரமல்ல ஊடகவியலாளர்களுக்கு தொந்தரவுகளை கொடுத்தவர்களையும் கைதுசெய்ய ஜனாதிபதி இடமளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சநதிப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இந்த விதமாக நாட்டை ஆட்சி செய்ய முடியாது. ஜனாதிபதியின் அதிகாரத்தில் நாடாளுமன்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது நாடாளுமன்றம் ஜனாதிபதியின் அதிகாரங்களை பறிக்க வேண்டும் எனவும் விக்ரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top