கோத்தபாயவை பார்த்து அனைவரும் அச்சப்படுகின்றனர்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்தால் அனைவரும் அச்சப்படவேண்டியிருக்கும் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
குண்டுடன் ஒருவர் காணப்படுகின்றார் என தெரிந்தால் நாங்கள் அனைவரும் தப்பியோட மாட்டோமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னைய அரசாங்கத்தில் அச்சுறுத்திய வெள்ளை வேனிற்கான முக்கிய காரணம் கோத்தபாய ராஜபக்சவே என மேர்வின் சில்வா பகிரங்கமாக தெரிவித்துள்ளார் எனவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகாவை தூக்கிலிடுவேன் என பகிரங்கமாக கோத்தபாய ராஜபக்ச ஒரு முறை தெரிவித்திருந்தார் என குறிப்பிட்டுள்ள ரஞ்சன்ரமநாயக்க இவ்வறான காரணங்களால் பலர் அவர் குறித்து அச்சமடைகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்