News

சட்ட உதவியுடன் உயிர் துறக்க உள்ள 104 வயது விஞ்ஞானி.

ஆஸ்திரேலியாவின் பல்கலைக்கழக ஆய்வுத்துறையில் கவுரவ பேராசிரியராக பணியாற்றிய 104 வயது கொண்ட விஞ்ஞானி டேவிட் குட்ஆல் சட்ட உதவியுடன் தன் உயிரை மாய்ந்து
கொள்ள உள்ளளார்.

ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் உள்ள எடித் கோவன் பல்கலைக்கழக ஆய்வுத்துறையில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டேவிட் குட்ஆல் (வயது 104). முதுமைக்காலத்தில்
இருந்த இவருக்கு கொடிய நோய்கள் இல்லை என்றாலும், அவரது வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமடைந்து வந்தது.

எனவே தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள விஞ்ஞானி டேவிட் குட்ஆல் விரும்பினார். தனது தற்கொலைக்கு உதவுமாறு ஆஸ்திரேலிய அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் ஒருவரின் தற்கொலைக்கு உதவுவது சட்டவிரோதம் என்ற கொள்கையை கடைப்பிடித்து வரும் நாடுகளில், ஆஸ்திரேலியாவும் ஒன்று. எனவே டேவிட்டின் கோரிக்கையை
ஏற்க மறுத்தது.

எனவே ஆஸ்திரேலிய அரசின் புறக்கணிப்பால் விரக்தியடைந்த டேவிட் குட்ஆல், சுவிட்சர்லாந்துக்கு வந்தார். அவரது அமைதியான மரணத்துக்கு உதவ முன்வந்த ‘எக்சிட்
இன்டர்நேஷனல்’ நிறுவனம், அவரது பயணத்துக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்தது.

அதன்படி சுவிட்சர்லாந்து வந்திறங்கிய அவர், பசல் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு விஷ ஊசி செலுத்தி உயிர் துறக்க
உள்ளளார்.

செய்தியாளர்களை சந்தித்த டேவிட் குட்ஆல், தனது வாழ்வை முடித்துக்கொள்ள ஆர்வமாய் இருப்பதாகவும், ஆஸ்திரேலியாவிலேயே இந்த வசதியை ஏற்படுத்தி தந்திருந்தால்
சிறப்பாக இருந்திருக்கும் என்றும் கூறினார். இனி மேலாவது இத்தகைய நடவடிக்கைக்கு அனுமதிப்பது குறித்து ஆஸ்திரேலியாவும், பிற நாடுகளும் பரிசீலிக்க வேண்டும் என்றும்
அவர் கேட்டுக்கொண்டார்.

தனது விருப்பத்தின்படி மருத்துவர்கள் உதவியுடன் தனது உயிரை விட முடிவு செய்துள்ள அவுஸ்திரேலிய விஞ்ஞானி டேவிட் குடால் தனது இறப்புக்கு முந்தைய நாளை
சந்தோஷமாக
கொண்டாடினார்.சுவிட்சர்லாந்திலுள்ள ஒரு மருத்துவமனையில் தனது உயிரை விட முடிவு செய்துள்ள டேவிட் தனது இறப்புக்கு முந்தைய நாளை எந்த பயமும் கவலையுமின்றி
சந்தோஷமாகக் கொண்டாடியதோடு பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் ‘Ode To Joy’ என்ற ஜேர்மானிய பாடலின் சில வரிகளை மகிழ்வுடன் பாடினார்.

உயிர் துறக்கும்போது பாடல் எதையாவது தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டால் பீத்தோவனின் ஒன்பதாவது Symphonyயைக் கேட்டுக்கொண்டே உயிர் துறக்க விரும்புவதாகத்
தெரிவித்தார் தனக்கு விருப்பமான அவுஸ்திரேலிய கிராமப்புறத்திற்கு அவர் திரும்ப செல்ல விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இன்று தனது உயிரை விட முடிவு
செய்துள்ள 104 வயதான டேவிட் குடால் ரகசிய இடம் ஒன்றிலுள்ள மருத்துவமனையில் தனது குடும்ப உறுப்பினர்கள் நால்வர் மற்றும் தனது நெருங்கிய நண்பர் ஒருவர் ஆகியோர்
முன்னிலையில் தனது இறுதி மூச்சை விடவிருக்கிறார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top