சர்வதேச ரீதியில் உயர் இடத்தில் புலிகள் புலம்பெயர் அமைப்புகள்: கோத்தாவுக்கு ஏற்பட்ட அச்சம்!

புலிகள் புலம்பெயர் அமைப்புகள் சர்வதேச ரீதியில் உயரிய இடத்தில் இருக்கின்றனர். இன்னும் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. ஆகவே எந்தவொரு அரசாங்கமும் பாதுகாப்பு தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
“எந்த நாட்டில் பயங்கரவாத தலைவரை நினைவுகூருவதற்கு இடமளிக்கப்படுகின்றது. அதே போன்று “மே 18, தமிழ் இனவழிப்பு நாள்” என முன்னெடுக்கப்படுகின்றது.
ஆனால் மே 18 ஆம் திகதி புலிகளுக்கு எதிராக இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடாகும். இராணுவத்தால் பயங்கரவாதிகளுக்கு எதிராக கொண்டு சென்ற செயற்பாடுகளை தமிழ் மக்களின் இனவழிப்பு என பகிரங்கமாக நினைவு கூறப்படுகின்றது.
இதன் மூலம் மீண்டும் விடுதலைப் புலிகளின் அரம்ப காலமாகிய 1970இல் இறுதிக்காலத்திற்கும் அப்பால் சென்ற நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்றே அர்த்தம்.
புதைக்கப்பட்ட ஆயுதங்கள் அப்பிரதேசங்களில் இருக்கலாம், அதே போல் புலிகள் புலம்பெயர் அமைப்புகள், சர்வதேச ரீதியில் உயரிய இடத்தில் இருக்கின்றனர். இன்னும் நிதி சேகரிப்பு தொடர்பாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த விடயங்கள் 1970, 80 காலப்பகுதியை விடவும் அப்பால் சென்ற நிலையிலேயே இருக்கின்றன.
தற்போது பயங்கரவாத அமைப்புகள், மற்றும் இணையத்தள செயற்பாடுகள் என்பன அப்போதைய காலத்தை விடவும் வேகமாக பரப்பப்படுகின்றன.
ஆகவே, எந்தவொரு அரசாங்கமும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும். கண்களை மூடிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.” என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.