சிறையில் இருப்பவர்களில் அதிகமானவர்கள் இராணுவத்தினர் தான்! – என்கிறார் கோத்தா

இப்போது சிறையில் இருப்பவர்களில் அதிகமானவர்கள் இராணுவத்தினர் தான் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இன்று சிறையில் இருப்பவர்களில் அதிகமானவர்கள் இராணுவ வீரர்களே. அவர்கள் வௌியில் வர வேண்டுமானால் இருக்கும் ஒரே வாழி கோத்தாபய ராஜபக்ஷவை காட்டிக் கொடுப்பதே. இராணுவத்தினர் ஒருபோதும் பொய் கூறி வாழக்கையை பாதுகாத்துக் கொள்பவர்கள் அல்ல. இராணுவத்தினர் நாட்டுக்காக செய்த அர்ப்பணிப்புக்களை கண்டுகொள்ளாமல் பல்வேறு விதமாக அவர்களை கஷ்டத்தில் தள்ளி விட்டுள்ளதாக கோத்தாபய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.