News

சீன அதிபருடன் வடகொரியா அதிபர் திடீர் சந்திப்பு – டிரம்பை சந்திக்கும் முன் உயர்மட்ட ஆலோசனை

வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையிலான சந்திப்பு பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் நிலையில் சீன அதிபர் ஜின்பிங்கை வடகொரியா அதிபர் சந்தித்தார்.

பரம விரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா – வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் நேருக்குநேர் சந்தித்துப் பேச ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், அறிவிக்கப்படாத திடீர் பயணமாக சீன அதிபர் ஜின்பிங்கை வடகொரியா அதிபர் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வடகொரிய அதிபருக்கு சீன அதிபர் விருந்தளித்து கவுரவித்தார்.

மேலும், வடகொரியாவின் பொருளாதார வளர்ச்சியில் சீனா உதவும் என அதிபர் ஜின்பிங் உறுதியளித்ததாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top