India

ஜெயலலிதாவின் மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா எப்போது உயிரிழந்தார் என்ற அதிர்ச்சித் தகவலை, சசிகலாவின் சகோதரனான திவாகரன் வெளியிட்டுள்ளார். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும், ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (வியாழக்கிழமை) ஆஜராகி வாக்குமூலம் வழங்கிய அவர், செய்தியாளர்களைச் சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த 2016, டிசம்பர் 4 ஆம் திகதியே தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலதா இறந்துவிட்டதான தகவல் கிடைத்ததாக அவர் கூறியுள்ளார். முதல்முறையாக தான் ஜெயலலிதாவை பார்க்க சென்றபோது அவர் தூங்கி விட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியதாகவும், அதனால் அவரை பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். அத்துடன் அதற்கு அடுத்தபடியாக ஜெயலலிதாவை தான் டிசம்பர் 4ஆம் திகதி பார்க்க சென்றதாகவும், அப்போது அவர் இறந்த நிலையில் படுக்கவைக்கப்பட்டிருந்தார் என்றும் திவாகரன் கூறியுள்ளார்.

மேலும் ஜெயலலிதா இறந்த பின்னர் முதலமைச்சரை தேர்வு செய்யும் கடப்பாடு நிலவிய காலத்தில் அப்பதவிக்காக பலர் முந்தியடித்து போட்டி போட்டதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் திகதியே இறந்தார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில், இல்லை அவர் 4ஆம் திகதியே இறந்து விட்டார் என தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top