News

ஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு – ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழப்பு!

ஜெர்மனியின் பிரிபாக்-பெச்சின்கென் பகுதியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜேர்மனியில் உள்ள Saarbruecken நகரில் நபர் ஒருவர் சொந்த குடும்பத்தினர் மீதே துப்பாக்கி சூடு நடத்தி கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Saarbruecken நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் குடும்ப விழா ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது அந்த குடும்ப உறுப்பினர் ஒருவர் திடீரென்று துப்பாக்கியால் பலமுறை சுடத்துவங்கியுள்ளார். இதில் இருவர் சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். உயிர் பயத்தில் அங்கிருந்து தப்பிக்க முயன்ற பலர் மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், அவரும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர் தான் எனவும் கூறப்படுகிறது.

குடும்ப பிரச்னை காரணமாகவே துப்பாக்கி சூடு சம்பவம் நடந்திருக்கலாம் என அதிகாரிகள் தரப்பு சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top