ஜேர்மனில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள் .

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் செத்து மடிந்து இன்றுடன் 9 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், ஜேர்மனில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்கள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு இன்று ஜேர்மன், டுசில்டோர்வ் நகரில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஜேர்மன் மக்கள் அனைவரும் டுசில்டோவ் தொடருந்து நிலையத்தின் முன்பாக அணிதிரண்டு பேரணியாக வடமத்திய மாகாணத்தின் சட்டசபை (லண்டராக்) வளாகத்தை வந்தடைந்தனர். இதேவேளை, முள்ளவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலியும், வணக்க நிகழ்வுகளும் நடைபெற்றள்ளன.