தன்னை ஏமாற்றிய காதலியை 7 துண்டாக வெட்டிய காதலன்!

தனது காதலியின் கன்னித்தன்மை தொடர்பில் சந்தேகம் கொண்ட காதலன், காதலியை கொன்று உடலை 7 துண்டுகளாக வெட்டியுள்ளார். அவரைப் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தைவான் நாட்டில் பாங்கியோ மாவட்டத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளராக செயல்பட்டு வருபவர் 28 வயதான கேரி சூ. இவர் 28 வயதான ஜெமீன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஹுவாங் வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதாக கேரி சூவுக்கு சந்தேகம் எழுந்தது. தனது காதலி தன்னை ஏமாற்றி வருவதாக கருதி ஆத்திரம் கொண்ட கேரி, அவரைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த 19 ஆம் திகதி அவரது குடியிருப்புக்கு சென்ற கேரி, அவரைக் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் உடலை 7 துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் வைத்து கட்டியுள்ளார். இதனை நள்ளிரவு கடந்த நேரம் அருகாமையில் உள்ள பூந்தோட்டத்தில் மறைத்து வைத்துள்ளார். இதனிடையே ஹுவாங்கின் சகோதரர் தமது சகோதரியை இரண்டு நாள்களாக காணவில்லை என பொலிஸாருக்குத் தகவல் அளித்துள்ளார். மேலும் கேரி மீது சந்தேகம் உள்ளது எனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், கண்காணிப்பு கமெரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில் கடந்த 20 ஆம் திகதி கேரி பிளாஸ்டிக் பைகளை எடுத்துச் செல்வது பதிவாகியிருந்தது. அத்துடன் அவரது இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தனது காதலி தன்னை ஏமாற்றியதாகவும் அவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். தொடர்ந்து பூங்காவில் இருந்து 7 பிளாஸ்ரிக் பைகளைக் கைப்பற்றிய பொலிஸார், தைவான் சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மருத்துவமனை அருகே கேரியின் தற்கொலை செய்த உடலையும் மீட்டுள்ளனர்.