தமிழ் அரசியல் கைதி விவகாரம்: சந்திரிக்காவின் கோரிக்கையினை நிராகரித்த மைத்திரி?

நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விடுத்த கோரிக்கையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் அவர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட மற்றும் உதவிய குற்றத்திற்காக தமிழ் அரசியல் கைதிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தன்னை கொலை செய்ய முயற்சித்த குற்றத்திற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை வெசாக் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு சந்திரிகா, ஜனாதிபதிக்கு கடிதம் எடுதியிருந்தார். இந்த விடயம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் சந்திரிக்கா குமாரதுங்க தெரியப்படுத்தியிருந்தார். எனினும், இந்த கோரிக்கைக்கு அமைய இதுவரையிலும், அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் கோரிக்கையினை நிராகரித்துள்ளதன் காரணமாகவே அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. >