தாயாரால் கடத்தப்பட்ட பிரித்தானிய சிறுவனின் உயிருக்கு ஆபத்து? தேடுதல் வேட்டையில் இன்டர்போல் !

ஸ்பெயினில் வைத்து சொந்த தாயாரால் கடத்தப்பட்ட பிரித்தானிய சிறுவனை மீட்க இன்டர்போல் உதவியை நாடிய தந்தை. இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச பொலிசாரின் உதவியை நாடிய சிறுவனின் தந்தை டேவி தாம்சன், தமது 6 வயது மகன் கிழக்கு ஐரோப்பாவின் ஏதேனும் ஒரு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார்.
வார இறுதி நாட்களில் தமது தாயாருடன் செலவிட சென்ற சிறுவன் திங்களன்று திரும்பாததை அடுத்தே டேவி தாம்சன், பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். >மட்டுமின்றி தம்மீதான கோபத்தை சிறுவன் மீது அவனது தாயார் காட்டலாம் எனவும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக விசாரணையை துவங்கிய பொலிசார், டேவி தாம்சனின் முன்னாள் மனைவியும் சிறுவனின் தாயாருமான 48 வயது மிர்காவின் தொலைபேசி கடந்த 24 மணி நேரமாக தொடர்பில் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே ஸ்பானிய எல்லையில் அமைந்துள்ள Ayamonte நகர நீதிபதி, குறித்த விவகாரத்தில் சர்வதேச பொலிசார் உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். சிறுவனை அழைத்துக் கொண்டு அவனது தாயார் அவரது தாய்நாடான போலந்துக்கு சென்றிருக்கலாம் எனவும் நீதிமன்றம் சந்தேகம் தெரிவித்துள்ளது.