News

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!

திருகோணமலை மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் பல்வேறு இடங்களில் இன்று பொதுமக்களாலும் அரசியல் கட்சிகளாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். திருகோணமலை நகரில், சிவன் கோயிலடி, தந்தை செல்வாவின் சிலைக்கு முன்பாக தமிழரசு கட்சியினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு மக்கள் மயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தினால் வாகரை நாகபுரத்தில் இன்று காலை 11 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது. மூதூர் பிரதேசத்தில் பட்டித்திடல் பிள்ளையார் கோவில், மணற்சேனை முருகன் கோவில், பள்ளிக்குடியிருப்பு, சங்கபுரம் மூதுர் கிழக்கு போன்ற பிரதேசங்களிள் பொதுமக்களின் ஏற்பாட்டிலும் இந்த நிகழ்வு நடைபெற்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top