India

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது இவர்களே: வெளியான தகவல் !!!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், 2 துணை வட்டாச்சியர்களே துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் மீது, கடந்த 22ஆம் திகதி பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர், இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவத்தில், துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்? என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், பொலிசாரின் முதல் தகவல் அறிக்கையில்(FIR) கண்ணன் மற்றும் சேகர் ஆகிய இரண்டு துணை வட்டாச்சியர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்ட நிலையில், பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவதை தவிர்க்கவே துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் FIRயில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top