தூத்துக்குடியில் மீண்டும் பேரணி: வெளியான தகவல் ..

வரும் 29 ஆம் திகதி மீண்டும் தூத்துக்குடியில் ஒரு பேரணி நடத்த உள்ளதாக பிரபல தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அந்த பேரணி நடைபெற இருப்பதாகவும், திருச்செந்தூரிலிருந்து வீர பாண்டியபட்டினம் வரை இந்த பேரணி நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற பேரணியில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது அப்பாவி பொதுமக்கள் 12 பேரும் அதற்கடுத்த நாள் ஒருவருமாக 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தார்கள். அந்த மரணங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலேயே இந்த பேரணி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை 29 ஆம் திகதி மீண்டும் ஒரு பேரணி நடைபெற இருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேரணி மீனவர் கூட்டமைப்பு சார்பாக நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது, அனைத்துப் பரதர் கூட்டமைப்பு மற்றும் பிற மீனவ கூட்டமைப்புகள் இணைந்து இது தொடர்பாக தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.<