News

தூத்துக்குடியை பாராது இந்திய மத்திய அரசு கனடா மீது பரிவு காட்டியது ஏன்?

தமிழகத்தின் தூத்துக்குடியில் ஏற்பட்ட வன்முறையில் 13பேர் கொல்லப்பட்ட போது கண்டுகொள்ளாத இந்திய மத்திய அரசாங்கம் கனடா மீது கரிசனை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் கனடாவில் மிசுசாகா நகரில் இந்திய வம்வாவளி மக்கள் அதிகம் செல்லும் மும்பாய் மகால் உணவு விடுதியில் மர்ம நபர்கள் இருவர் நடத்திய குண்டுத்தாக்குதலில் 15பேர் காயமடைந்தனர். >மிகவும் கண்டிக்கத்தக்க தாக்குதல் இது. இதில் சம்மந்தப்பட்டவர்களை பிடிக்க பொலிஸார் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட அனைவரும் வீடு திரும்பிவிட்டனர் என்பதுவும் அமைதி தருகிறது. ஆனால் தனது நலன்சார்ந்த அரசியலை முன்னெடுக்க ரொரன்ரோவில் உள்ள இந்திய தூதுவராலயம் முயல்வது தான் அதீத கரிசனை தருகிறது என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அந்தப் பகுதியில் வந்த ஒருவர் தான் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் எனக்கூறி ஊடகங்களுக்கு போட்டியளித்துள்ளார்.

பொலிஸாரோ, பாதுகாப்பு துறையினரோ சொல்லாத விடயத்தை தானாக முந்திக் கொண்டு இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என தெரிவித்துள்ளார். கனடாவில் பாரதிய ஜனதா என்ற கட்சி இருக்கிறதா என்பது எனக்கு புரியவில்லை. துணைத்தூதுவர் வேறு ஊடகங்களில் தமது அரசியலை இத்தாக்குதலை முன்னிறுத்து முன்னெடுத்தார்.தாம் பாதிக்கப்பட்ட மக்களை அவர்கள் வீடுகளிலும் மருத்துவ மனையிலும் வேறு சென்று சந்தித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதில் நகைச்சுவையான விடயம் என்ன வென்றால் இந்தியர் ஒருவர் கனடியப் பிரஜை ஆனதும் அவர் தனது இந்திய குடியுரிமையை தானாகவே இழந்துவிடுவார். அதாவது இந்தியா அவர்களின் இந்திய குடியுரிமையை பறித்துவிடும். பின்னர் அவர்கள் கனடிய கடவுச்சீட்டில் இந்தியா செல்லவேண்டுமானால் இந்திய விசாவிற்கு விண்ணப்பித்து அது வழங்கப்பட்டாலேயே செல்ல முடியும்.

இப்போது சொல்லுங்கள் எவ்வாறான போலித்தனமான செயற்பாடுகள் இவை. இந்திய அரசிற்கும் கனடிய சீக்கியர்களுக்கும் இடையே நிலவும் முறுகல்நிலையை இவ்விடயத்தில் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இந்திய தூதுவராலயம் முனைகிறது. இது கனடிய உள்விவகாரத்திலான அத்துமீறிய செயலாகும். இதேவேளை தமிழகத்தில் நரபலி எடுக்கப்பட்ட தமிழர்கள் விடயத்திலும் இங்கு பாதிக்கப்பட்ட கனடியர்கள் விடயத்திலும் இந்திய அணுகுமுறை பல செய்திகளையும் சொல்லி நிற்கிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top