India

தூத்துக்குடி கலவரத்தின் திடுக்கிடும் காட்சிகள்: பொலிஸ் அராஜகத்தின் உச்சகட்டம் …

தமிழகத்தில் நடைபெறுவது மக்களாட்சியா இல்லை வெள்ளைக்காரன் ஆட்சியா? ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிறகு தூத்துக்குடியில் இதுபோன்ற சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது என சமூக ஆர்வலர்கள் கொதித்தெழுந்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடி மக்கள் 100 நாட்களாக போராட்டம் நடத்தினர். இதன் உச்சகட்டமாக இன்று பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்தனர்.

ஆட்சியர் மாளிகையை முற்றுகையிட சென்றவர்களை பொலிசார் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து பொலிசார் கண்மூடித்தனமாக காக்கை குருவிகளைப் போல அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்றுள்ளனர். இரண்டு முறை நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 பெண்கள் உட்பட 10 பேர் என தெரியவந்துள்ளது. இந்த அரக்க சம்பவத்திற்கு தேசிய, மற்றும் தமிழக தலைவர்கள் முதல் சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எதிரி நாட்டவரை இலக்கு வைத்து சுட்டுக் கொல்லக் கூடிய ஆயுதங்களுடன் போராட்ட களத்தில் முன்னனியில் நின்றவர்களை இலக்கு வைத்து மார்புகளில் மட்டுமே சுட்டுக் கொன்றுள்ளனர். இது தொடர்பான பதை பதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது பெருவரியான மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதனிடையே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால் அங்கு கூடுதலாக 2000 பொலிசார் விரைந்துள்ளனர். மேலும் வீடு வீடாகப் புகுந்து பொலிசார் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவங்களால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top