India

தூத்துக்குடி சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டது தீவிரவாதிகளை வேட்டையாடடும் துப்பாக்கி: அதிர்ச்சி தகவல்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பயன்படுத்தியது தீவிரவாதிகளுக்கு எதிராக சுட பயன்படுத்தும் துப்பாக்கி ரகம் என அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இன்சாஸ் எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கிகள் கலவரத்தை அடக்க பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக சட்டவிரோத கும்பலை போராட்டக்களத்தில் தடுக்க வேண்டும் என்றால் தமிழ்நாடு காவல் நிலைய ஆணையர் பிரிவு 703-ன் படி பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அதன்படி போராட்டக்காரர்களை முதலில் கலைந்து போகும்படி அறிவுறுத்த வேண்டும். கலைந்து போக மறுத்தால் கண்ணீர் புகைகுண்டு வீச வேண்டும். தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடிக்க வேண்டும் இல்லையெனில் தடியடி நடத்த வேண்டும்.

அப்போதும் கலைந்து செல்ல மறுத்தால் உச்சகட்டமாக துப்பாக்கி சூடு நடத்தப்படும், அதிலும் முதலில் வானத்தை நோக்கி சுட வேண்டும். அடுத்து முழங்காலை நோக்கியே சுட வேண்டும். அதுவும் போராட்டக்காரர்களை எச்சரிக்கவே துப்பபக்கிச்சூடு நடத்த வேண்டுமே தவிர கொலை செய்யும் நோக்கத்தில் சுடக்கூடாது என்பது விதிமுறையாகும். ஆனால் மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றாமலேயே துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி 800 மீட்டர் வரை குறிவைத்து சுடப் பயன்படுத்தப்படும் வகை துப்பாக்கி ரகம் ஆகும்.

இது ஒரே நேரத்தில் 30 குண்டுகள் வரை பயண்படுத்தலாம். இது இந்திய எல்லைகளில் தீவிரவாதிகளுக்கு எதிராக தூரத்திலிருந்து குறிவைத்துசுட பயன்படுத்தப்படும். கலவரத்தின் போது இந்த துப்பாக்கியை பயன்படுத்த அனுமதி கிடையாது. ஆனால் வட்டாச்சியர் முதல் மாவட்ட ஆட்சியா் வரை அனுமதி பெற்றே இந்த ரக துப்பாக்கியை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top