தென்கொரியா அதிபருடன் கிம் ஜாங் அன் அவசர ஆலோசனை

வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் இன்று தென்கொரியா அதிபர் மூன் ஜே-வை ரகசியமாக சந்தித்துப் பேசியதாக தெரியவந்துள்ளது.
வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் இன்று தென்கொரியா அதிபர் மூன் ஜே-வை இன்று ரகசியமாக சந்தித்துப் பேசியதாக தென்கொரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த முறை சந்தித்து பேசிய எல்லைப்பகுதி கிராமமான பன்முன்ஜோம் என்னும் இடத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் சுமார் இரண்டு மணிநேரம் ஆலோசனை நடத்தியதாகவும், இதுதொடர்பாக விரிவான அதிகாரப்பூர்வ தகவல் நாளை அரசு தரப்பில் இருந்து வெளியாகலாம் எனவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.