News

தேவாலயங்களில் தாக்குதல் நடத்தியது இவர்கள் தானாம்! வெளியான அதிர்ச்சி தகவல் .

இந்தோனிசியாவில் தேவாலயங்களில் நடந்த தாக்குதல் நடத்திய குடும்பத்தினர் பார்ப்பதற்கு சாதரணமானவர்கள் போன்று தான் இருந்தனர் என்று அவர்களுடன் பழகிய அக்கம்
பக்கத்தினர் கூறியுள்ளனர்
.
சுரபாயா நகரில் உள்ள மூன்று தேவாலயங்களில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்களுக்கு காரணம் ஒரே குடும்பம் தான் என பொலிசார் தெரிவித்ததிருந்த நிலையில்,
அந்த குடும்பத்தினர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் தெரிவிக்கையில், சுரபியாவின் மூன்று தேவாலயங்களில் தாக்குதல் நடத்தியது Dita Oepriarto(46) குடும்பத்தினர் தான் எனவும், Dita Oepriarto-க்கு
Puji Kuswati(42) என்ற மனைவியும், நான்கு குழந்தைகளும் உள்ளனர் என தெரிவித்துள்ளது.அவர்களுக்கு வயது 8 முதல் 17 வயது வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மோசமான தாக்குதலுக்கு காரணம் Dita Oepriarto குடும்பத்தினர் தான் என்ற தகவலை அறிந்தவுடன் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஏனெனில் அவர்கள் பார்ப்பதற்கு சாதாரண மனிதர்கள் போன்று தான் இருந்தனர், அவர்களின் குழந்தைகள் இந்த வீதியில் கால்பந்து, பூப்பறிப்பது மற்றும் சைக்கிள்
போன்றவைகளை தான் அடிக்கடி ஓட்டி விளையாடுவார்கள் எங்கள் குடும்பத்தின் குழந்தைகளும் அவர்களுடன் விளையாடுவார்கள்.

மற்றொருவரான Samsul Hadi கூறுகையில், இந்த குடும்பத்தினரை நீண்ட நாட்களாக தெரியும், ஆனால் இது போன்ற செயலில் ஈடுபடுவார்கள் என்று தெரியாது, அதுமட்டுமின்றி
சமீபத்தில் அவர்களிடம் பேசவில்லை என்று கூறியுள்ளார். இந்த குடும்பத்தினர் சிரியாவிலிருந்து வந்திருக்கலாம் என்று கூறப்பட்ட தகவலை பொலிசார் மறுத்துள்ளனர்.
தாக்குதல் நடத்துவதற்கு முந்தைய நாள் இரவு கூட Dita Oepriarto ரம்ஜான் விடுமுறை பற்றி இரவில் அருகில் இருந்த ஒருவரின் வீட்டில் பேசியதாக கூறப்படுகிறது.

அக்கம்பக்கத்தினர் இப்படி கூறும் நிலையில், பொலிசார் நடத்திய விசாரணையில் இவர்கள் பயங்கரவாத குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி சுரபாயா நகரின் காவல்நிலையத்தில் நடந்த தாக்குதலில் Dita Oepriarto-வின் மகனுடன் வந்த தீவிரவாதிகள் தான் சிறுவனை மனித வெடிகுண்டாக
பயன்படுத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.

மூன்று தேவாலயங்களில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்களில் இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top