News

தேவாலயத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய குடும்பம்: சிறுமி உள்ளிட்ட 13 பேர் உடல் சிதறி பலி .

இந்தோனேசியாவின் சுரபாயா நகரில் உள்ள மூன்று தேவாலயங்களில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்களுக்கு ஒரு குடும்பமே காரணம் என பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்ட நிலையில் பலர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். தாயார் ஒருவரும், அவரது இரண்டு மகள்களும் சம்பவத்தின்போது தேவாலயத்தில் புகுந்து வெடிகுண்டை இயக்கி உள்ளனர். அதே வேளையில் 3 ஆண்கள் இணைந்து துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தற்போது குறித்த தாக்குதலுக்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ள நிலையில், 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தோனேசியாவில் நடத்தப்படும் கொடூர தாக்குதல் இதுவென விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தக்குதலில் ஈடுபட்ட குடும்பமானது சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தில் பயிற்சி பெற்றிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

சுரபாயா தேவாலயம் உள்ளிட்ட 3 முக்கிய தேவாலயங்களில் தாக்குதல் நடத்தியது இந்த குடும்பமே என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணி அளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 10 நிமிடங்கள் இடைவெளியில் இந்த 3 தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளது. தலைநகர் ஜக்கார்தாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் பொதுமக்களில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

2002 ஆம் ஆண்டு அல் கொய்தா அமைப்பு நடத்திய பாரிய வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதுவே இதுவரை நடந்த தாக்குதல்களில் மிகக் கொடூரமானது என அறியப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top