India

தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுக்களை கூறினால் சட்டப்படி நடவடிக்கை : திவாகரனுக்கு நோட்டீஸ் விட்டார் சசி

சென்னை: திவாகரனுக்கு சசிகலாவின் வழக்கறிஞரான செந்தூர்பாண்டியன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சசிகலாவின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்த கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. சசிகலா பற்றி தொடர்ந்து அவதூறாக பேசி வருவது ஏற்புடையதல்ல என்றும் கூறப்பட்டுள்ளது. உண்மைக்கு மாறாக தொடர்ந்து பேசி வருவதை இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தினகரன் குறித்து பேசுவதில் பழிவாங்கும் எண்ணமும், காழ்புணர்ச்சியும் மேலோங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திவாகரன் யாரையோ திருப்திப்படுத்த, தினகரன் பற்றி காழ்ப்புணர்ச்சியுடன் பேசுகிறார். உடன் பிறந்த சகோதரி என ஊடகங்களில் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் திவாகரனுக்கு சசி தரப்பு அறிவுறுத்தியுள்ளது. துரோகிகளிடம் கூட்டு வைத்துள்ள திவாகரனை தமிழகம் மன்னிக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. சசிகலாவை பற்றி உண்மைக்கு மாறாக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதை திவாகரன் நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தாமல் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top