Canada

தொடர் கொலையாளி ப்ரூஸ் மக்கார்தரால் கொல்லப்பட்டோருக்கான நினைவேந்தல்

தொடர் கொலையாளி ப்ரூஸ் மக்கார்தரால் கொல்லப்பட்டோருக்கான நினைவேந்தல்

ப்ரூஸ் மக்கார்தரால் கொல்லப்பட்டோரை நினைவில் கொள்வதற்காக தமிழ் கனடிய சமூகத்தின் உறுப்பினர்கள் ஏப்ரல் 26, 2018 இல் ஸ்காபாரோவில் ஒன்றுகூடினர். கொல்லப்பட்டவர்களில், ஸ்கந்தா நவரட்ணம் மற்றும் கிருஷ்ணகுமார் கனகரத்தினம் ஆகிய இரு தமிழர்களும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இலங்கையை விட்டு வெளியேறி  கனடாவில் தஞ்சம் கோரியவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடியத் தமிழர் பேரவை(CTC) இந்நினைவேந்தலை தென்னாசிய எயிட்ஸ் தடுப்பு அமைப்பு (ASAAP), சர்வதேச மன்னிப்புச் சபை (AI),ஒண்டாரியோ புதிய குடிவரவாளருக்கான அமைப்பு (OCASI), அகதிகளுக்கான கனடிய அமைப்பு (CCR), அகதிகளுக்கானசட்டத்தரணிகள் சங்கம் (CARL),  தமிழ் உழைப்பாளர் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து  ஒழுங்கு செய்திருந்தது. பாதிக்கப்பட்ட சிலரின் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பல அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இந்த கடினமான சூழ்நிலையால் தவிக்கும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருகும் நண்பர்களுக்கும் மற்றும் LGBTQ+ சமூகத்திற்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்கள். அரசாங்கமும் ஏனைய நிறுவனங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு  பாதுகாப்பளிப்பதிலும்அகதிகள் அமைப்புமுறையிலும் தோல்வியடைந்ததை பேச்சாளர்கள் அனைவரும்  சுட்டிக்காட்டினர்.

2010 ஆம் ஆண்டு, எம்.வி. சன் சீ கப்பலில் வந்து அகதி அந்தஸ்து கோரிய கிருஸ்ணகுமார் கனகரத்தினம் அவர்களின் பெற்றோரால் பிரதமர் ஜஸ்டின் ரூடோவிற்கு எழுதப்பட்ட கடிதமும் நினைவேந்தலில் வாசிக்கப்பட்டது. கிருஷ்ணகுமாரின் பெற்றோர் எழுதிய கடிதத்தில்அவர்களின் மகன் கொல்லப்பட்டதற்கு நீதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர். அத்தோடு, சமய முறைப்படி இறுதிச் சடங்குகளை நிகழ்த்துவதற்கு அவர்களது மகனின் உடலத்தைப் பெற உதவுமாறும் பிரதமரிடம் கேட்டுக்கொண்டனர்.கனேடிய தமிழ் பேரவை, தமது மகனை இழந்து தவிக்கும் வயதான பெற்றோரின் வேண்டுகோளை நிறைவேற்ற உதவுமாறுகனேடிய அரசாங்கத்தையும்சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் கேட்டுக் கொள்கிறது 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top