News

நான்காவது முறை மூடப்படும் ஸ்டெர்லைட் ஆலை: நிரந்தர தீர்வு என்ன?

ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை போதாது என சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிறகு ஸ்டெர்லை ஆலையை மூடுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார். இவ்வாறு ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவது இது நான்காவது முறை என கூறப்படுகிறது.

இது குறித்து பேசிய முன்னாள் நீதியரசர் ஹரி பரந்தாமன் இதற்கு முன்பு 1998 ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டபோது தமிழக அரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஸ்டெர்லைட் நிர்வாக என மூன்று தரப்பு கருத்தும் ஒரே மாதிரியாக அமைந்தது என சுட்டிகாட்டியுள்ளார். மேலும் 2010ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டாலும் 3 நாட்களில் மத்திய மாநில அரசுகளின் ஆதரவால் மீண்டும் ஆலை திறக்கப்பட்டது.

இதேபோல 3வது முறையாக 2013 ஆம் ஆண்டும் ஆலை மூடப்ப்பட்டு உச்சநீதிமன்றத்தின் ஆணையை பெற்று ஆலையை திறந்தனர். இவ்வாறு 3 முறை மூடப்பட்டு திறக்கப்பட்ட நிலையில், தற்போது 4 வது முறையாக அரசாணை மூலம் ஆலையை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுப்பது கண்துடைப்பாகவே கருத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து பேசிய அவர் அமைச்சரவை மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கொள்கை முடிவு எடுப்பதே நிரந்தர தீர்வுக்கான வழி என தெரிவித்துள்ளார்.

Copyright © 2015 EETTV.COM.

To Top