கனடாவில் ரயில் தண்டவாளத்தில் ஓடிய நாயை காப்பாற்ற இரு பெண்கள் முயன்ற நிலையில் ரயில் மோதியதில் நாய் இறந்ததோடு, இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. டொரண்டோவில் உள்ள Rosedale நகரில் தான் இச்சம்பவம் நேற்று அந்நாட்டு நேரப்படி இரவு 9 மணிக்கு நடந்துள்ளது.
இரண்டு பெண்கள் அங்குள்ள ரயில் தண்டவாளம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது, நாய் ஒன்று வேகமாக தண்டவாளம் மீது ஓடியுள்ளது. இதையடுத்து தண்டவாளத்தில் ரயில் வந்தால் நாய் மீது மோதிவிடுமோ என பயந்த இருவரும் நாயை காப்பாற்ற தண்டவாளத்தில் ஓடியுள்ளனர்.
அப்போது அங்கு திடீரென ரயில் வந்த நிலையில் இரு பெண்கள் மற்றும் நாய் மீது மோதியுள்ளது. இதில் நாய் உயிரிழந்துவிட இரண்டு பெண்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தில்லை என தெரியவந்துள்ளது.
இதனிடையில் ரயில் தண்டவாளங்களில் மக்கள் நடப்பதை தவிர்க்க வேண்டும் என பொலிசாரும், ரயில்வே அதிகாரிகளும் வலியுறுத்தியுள்ளனர்.