News

நாளை மகிந்த ராஜபக்ச எடுக்கவுள்ள முக்கியமான தீர்மானம்!

அரசாங்கத்தை நலினப்படுத்தும் செயற்பாடுகள் மெல்ல மெல்ல கூட்டு எதிர்க்கட்சி எடுத்துக் கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது. அண்மையில் அரசாங்கத்திலிருந்து 16 பேர் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் வெளியேறியிருந்தனர். இந்நிலையில் கூட்டரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் தன்னுடைய வழமையான நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும், மகிந்த ராஜபக்ச தரப்பினர் அரசுக்கு நெருக்கடி கொடுக்கம் செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றது.

குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியமைக்கப்படுவதை மகிந்த ராஜபக்ச தரப்பினர் விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட உறுப்பினரையும், ரணில் எதிர்ப்பு அணியுடன் இணைந்து எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை தீர்மானிக்கவுள்ளார் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நாளைய தினம் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. கடந்த 23 ஆம் திகதி இந்த அணியினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். அச் சந்திப்பைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடிப்பதனை இலக்காகக்கொண்டு போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் அப்போராட்டங்கள் சிலவற்றை கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்தும் மற்றும் சிலவற்றை தனியாகவும் நடத்தவுள்ளதாகவும் அந்த அணி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top