துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் நின்றுகொண்டிருந்த விமானத்தின் வால் பகுதியின்மீது புறப்பட்ட விமானத்தின் இறக்கை மோதி விபத்துக்குள்ளான வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியிலிருந்து சியோல் புறப்பட்ட Asiana Airlines விமானம், இஸ்தான்புல் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Turkish Airlines’ Airbus A321 விமானத்தில் வால் பகுதியில் மோதியதில் அது முற்றிலும் சேதமடைந்ததது.
நின்றுகொண்டிருந்த விமானத்திலிருந்து இறங்க முற்பட்ட பயணிகள் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். குழந்தைகள் பலர் விமானத்தில் இருந்த நிலையில் அதிருஷ்டவசமாக யருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Asiana Airlines விமானத்தில் பிரித்தானியாவின் Woodley, Berkshireஐச் சேர்ந்த Kaarina Barron (55) மற்றும் அவரது நண்பரான Clare Chambers ஆகியோர் பின் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
அப்போது ஒரு பெரிய வெடிகுண்டு வெடிப்பது போன்ற பலத்த சத்தம் ஏற்பட்டதாக Kaarina கூறினார். அந்த நேரத்தில் மனதில் பல பயங்கரமான எண்ணங்கள் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். விமானம் கவிழப்போகிறது, வெடிக்கப்போகிறது, இன்றுதான் என் வாழ்வின் இறுதி நாள் என்று நான் எண்ணினேன் என்கிறார் அவர். விமானங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்ட நிலையில் பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.