பற்றி எரிந்த வீட்டில் சிக்கிய 80 வயது மூதாட்டி.
அமெரிக்காவில் பற்றி எரிந்த வீட்டில் சிக்கிய மூதாட்டியை இளைஞர் ஒருவர் காப்பாற்றியிருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியின் சாலையில் அருகே உள்ள வீட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சாலை வழியே சென்ற வில்லியம்ஸ் என்ற கல்லூரி இளைஞன் உடனடியாக அந்த வீட்டில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்றியதாக கூறப்படுகிறது. அப்போது 80 வயது மூதாட்டியான கெய்ல் ஜான்ஸ்டன் மட்டும் இருந்ததால், அவரை பத்திரமாக மீட்டுள்ளார்.
பற்றி எரிந்த வீட்டினுள் சென்ற அவருக்கு எந்த ஒரு கயமும் ஏற்படவில்லை எனவும், மூதாட்டிக்கு மட்டுமே சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தகவல் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர். இது குறித்து அந்த மூதாட்டியின் பேத்தி கூறுகையில், ஆபத்து காலத்தில் உதவிய அந்த இளைஞனுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறேன், யாரையும் எதிர்ர்பார்க்காமல் துணிச்சலாக செயல்பட்டு காப்பாற்றியதற்கு மிகவும் நன்றி என கூறியுள்ளார்.