News

பாரிஸில் மேக்ரான் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை: பலர் கைது ..

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் மேக்ரான் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் அது வன்முறையாக மாறியதால் 40 பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் போராட்டக்காரர்கள் அனைவரையும் முழுவதுமாக பரிசோதித்த பின்னரே ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதிக்கபடுவார்கள் என்று காவல்துறை கூறியிருந்தனர்.

அதன்படி நேற்று ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கும் முன் அனைவரையும் முழுமையாக கண்காணித்தனர். மதியம் 2.30 மணி அளவில் போராட்டம் ஆரம்பிக்கப்படும் முன்பாகவே 32 பேரை கைது செய்தது பொலிஸ்.

அதன் பின் மாலை 4.30க்குள் கைது எண்ணிக்கை 43 ஆக உயர்ந்தது. இந்த ஆர்ப்பாட்டம் நடந்த போது ஆங்காங்கே வன்முறை வெடித்ததாகவும் முகமூடி அணிந்தவர்கள் காவல்துறையை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பதிலுக்கு காவல்துறையும் அவர்களை தாக்கியுள்ளனர். இந்த மோதலில் சுமார் 7 காவல்துறை அதிகாரிகள் லேசான காயம் அடைந்ததாக உள்துறை அமைச்சர் Geraard collomb தெரிவித்திருக்கிறார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top