பிரான்சில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு: இரண்டு பேர் காயம் .

பிரான்சில் மூகமுடி அணிந்த மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 23 வயது நபர் உட்பட பெண் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்சின் பாரிசில் கருப்பு முகமூடி அணிந்த மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 23 வயது மதிக்கத்தக்க நபர் காயமடைதுள்ளதாகவும், அவருடன் நாய் மற்றும் 83 வயது பெண்ணிற்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த சம்பவம் பாரிசின் Stalingrad Avenue பகுதியில் உள்ளூர் நேரப்படி 2.30 மணிக்கு நடந்துள்ளது.
காயமடைந்தவர்களை பொலிசார் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாகவும் இது என்ன காரணத்திற்காக நடத்தப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை எனவும், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிசார் கூறியுள்ளனர்.