பிரிட்டீஸ் கொலம்பியா சாலை விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்:
கனடாவில் கர்ப்பிணி பெண்ணொருவர் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் அவர் குடும்பத்தார் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளனர். பிரிட்டீஸ் கொலம்பியா மாகாணத்தை சேர்ந்தவர் ஜஸ்டின் (29). இவர் மனைவி தயா டயார்ட். ஜஸ்டினும், டயார்டும் ஒரு தினங்களுக்கு முன்னர் நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது உடன் அவர்களுடைய கார் ஓட்டுனரும் சென்றார், ஆனால் காரை ஜஸ்டின் தான் ஓட்டினார்.
சாலையில் கார் வேகமாக சென்று கொண்டிருந்த போது திடீரென சாலையோரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் டயார்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜஸ்டினும், கார் ஓட்டுனரும் படுகாயங்கள் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் உயிரிழந்த டயார்டின் குடும்பத்தார் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், டயார்ட் மிக சிறந்த பெண்ணாக திகழ்ந்தவர், பள்ளி ஆசிரியையாக பணியாற்றிய அவர் அந்த பணியை மிக பெருமையானதாக நினைத்து வாழ்ந்து வந்தார். அவருடைய திடீர் இழப்பை எங்களால் தாங்கமுடியவில்லை, அவரோடு சேர்ந்து வயிற்றில் உள்ள குழந்தையும் இறந்தது கூடுதல் சோகமாகும்.
எல்லோரும் நாங்கள் சொல்வது இதை தான், சாலையில் வாகனங்கள் ஓட்டும் போது கவனமாகவும், பாதுகாப்பாகவும் செல்லுங்கள். நீங்கள் அன்புவைத்திருக்கும் நபர்கள் உயிரிழந்தால் அதை தாங்குவது கடினம் என உருக்கமாக கூறப்பட்டுள்ளது.