News

பிரித்தானியாவின் மான்செஸ்டர் Crown Court-க்கு வெடிகுண்டு மிரட்டல்.

பிரித்தானியாவின் மான்செஸ்டரில் உள்ள Crown Court நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் உள்ளிருந்தவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். போனில் வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து நீதிமன்றம் தற்காலிகமாக மூடப்பட்டதாக சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் கூறியுள்ளார். இது குறித்து அந்நாட்டு நேரப்படி காலை 9.45 மணிக்கு முன்னால் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பொதுமக்கள் பயன்படுத்த நீதிமன்ற வளாகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்துக்கு வெளியில் நிம்மதியான சூழல் நிலவுவதாகவும் Manchester Evening News பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் 10.20 மணிக்கு பின்னர் மக்கள் நீதிமன்ற கட்டிடத்துக்குள் மீண்டும் செல்ல தொடங்கியதாக MEN பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மர்மமான போன் கால் தொடர்பாக அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும், இது ஒரு புரளியாக இருக்கலாம் எனவும் MEN பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top