பிரித்தானியாவில் பெட்ரோல் குண்டு வீசி 4 சிறுவர்களை கொலை செய்த சம்பவம்:

பிரித்தானியாவில் தூக்கத்தில் இருந்த 4 சிறுவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்த இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் வெளியான கண்காணிப்பு கமரா காட்சிகள் பார்ப்பவர் நெஞ்சை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது.
கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் நடந்த இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய Zak Bolland(23), அவரது காதலி Courtney Brierley(20) மற்றும் நண்பர் David Worrall(26) ஆகிய மூவருக்கும் மொத்தமாக 98 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கொடூரமாக கொல்லப்பட்ட 4 சிறுவர்களின் 17 வயது சகோதரருடன் ஏற்பட்ட வாக்குவாதமே குறித்த மூவரையும் இந்த பாதகச் செயலுக்கு தூண்டியுள்ளது. சம்பவத்தின் போது போலந்த் அதிகமாக மது மற்றும் போதை மருந்துக்கு அடிமையாக இருந்துள்ளார் என நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்துள்ளது.
போலந்த் மற்றும் டேவிட் ஆகிய இருவரும் இரண்டு கண்ணாடி போத்தல்களில் 1.50 பவுண்ட்ஸ் தொகைக்கு பெட்ரோல் வாங்கி வந்து அதிகாலை 5 மணி அளவில் இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளனர். சிறுவர்களின் குடியிருப்பில் நுழைந்து சமையலறை ஜன்னலின் கண்ணாடியை உடைத்து அதன் வழியாக பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர்.
இதில் 3 படுக்கை அறை கொண்ட அந்த குடியிருப்பு தீக்கிரையாகியுள்ளது.
குறித்த சம்பவத்தின்போது சிறுவர்கள் Demi Pearson(15), அவரது சகோதரர் Brandon(8), மற்றும் சகோதரிகள் Lacie(7), Lia(3) ஆகியோர் தூக்கத்தில் இருந்துள்ளனர்.