பிரித்தானிய இளவரசர் ஹரியின் திருமணத்தில் நடந்த நெகிழ்ச்சி தருணம் அந்த இருக்கை யாருக்கு?

பிரித்தானிய இளவரசர் ஹரியின் திருமணத்தில் இளவரசி டயானாவுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளவரசர் ஹரி தனது தாய் டயானா மீது அதிக பாசம் வைத்திருக்கிறார். நிச்சயதார்த்தின்போது தனது தாயின் மோதிரத்தில் இருந்து இரண்டு கற்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட மோதிரத்தை மெர்க்கலுக்கு அணிவித்தார்.
மேலும், தனது திருமணத்தில் டயானாவின் உறவினர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, அவரது சகோதரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்றைய திருமணத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் நிகழ்வாக, திருமணம் நடைபெற்ற தேவாலயத்தில் ஒரு இருக்கை காலியாக இருந்தது.
இளவரசர் வில்லியம்க்கு அருகில் இருந்த இந்த இருக்கை இளவரசி டயானாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது என கூறப்படுகிறது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.