News

பிரிந்த தழிழ் கட்சிகள் இணைந்து செயற்படுவதன் மூலம் சிங்கள கட்சிகளின் ஆதிக்கத்தைமட்டுப்படுத்த முடியும்.

தமிழர் அதிகளவு செறிந்து வாழும் தமிழ் பிரதேசங்களில் தமிழ் கட்சிகள் யாவும் ஒன்று இணைந்து செயற்படுவதன் மூலம் தான் சிங்கள பெரும்பான்மை கட்சிகளின் ஆதிக்கத்தை நாம் மட்டுப்படுத்த முடியும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் முதலாவதுஅமர்வு வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தலைவர் து.நடராஜசிங்கம் தலைமையில் இடம்பெற்றபோது அதில் விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் எமக்கு வெற்றியை தந்தாலும் சபையில் ஆட்சியை பிடிப்பதற்கு நாம் பெரும்பாடு பட்டோம் சில சபைகளில் ஒரு வாக்கினாலும் சில சபைகளில் சீட்டுழுப்பு மூலமும் வெற்றி பெற்ற சம்பவங்களை மறக்க முடியாது நாம் கூட்டாக சேர்ந்து ஆட்சியமைப்பதில் தமிழ் கட்சிகள் சிலவும் சுயேட்சை குழுக்களும் பெரும் ஆதரவை வழங்கியதையும் மறக்கமுடியாது எனினும் சில சபைகளில் நாம் தோல்விகளை தழுவி சபையின் தவிசாளர் பதவியை இழந்தோம் அதற்கு சில தமிழ் கட்சிகளின் வஞ்சக செயல்கள் காரணமாக அமைந்திருந்தது இதனை நாம் எதிர்பார்க்கவில்லை இதை யெல்லாம் மறப்போம் நாம் சிங்கள கட்சிகளின் ஆதிக்கம் மேலோங்கவிடாது.

எமது பிரதேசத்தை நாம் பாதுகாக்கவேண்டும் எம்மிலிருந்து பிரிந்து சென்ற சிறிரொலோ கட்சியை எம்மிடம் இணைய இச்சர்ந்தப்தில் அழைப்பு விடுக்கிறோம் எங்களோடு இணைந்து கொள்ள பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் அபிலாசைகளை நாம் நிறைவேற்ற எமது குட்டி அரசாக பிரதேச சபைகள் திகழ்கின்றன திருத்தப்படாத வீதிகளை நாம் திருத்தியமைப்போம் வீதிவிளக்குகள் இல்லாத வீதிகளில் வீதி விளக்குகளை பொருத்துவதுடன் பிரதேசங்களில் அபிவிருத்தியை மேலோங்க செய்வோம் கடந்த சபைகளின் குறைகளை நிவர்த்திசெய்வோம் குறைகளை நாம் பேசிக்கொண்டிராது நாம் செயல்பாட்டில் ஈடுபடுவோம் நல்ல கலாச்சார சூழலை உருவாக்குவோம் நமது தேசத்தை நாமே ஆளுவோம் சிங்கள கட்சிகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்காது செயற்பட நாம் ஒன்றுபட்டு செயற்படுவோம் என்றார்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top