News

புதுக்குடியிருப்பு அனுஷ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு .

இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களை நினைவு கூரும் நிகழ்வு புதுக்குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு இன்று புதுக்குடியிருப்பு சந்தியில் காலை 9.30 மணியளவில் இறுதிப்போரில் உயிரிழந்த மக்களின் நினைவாக அமைக்கப்பட்ட கொட்டகையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பொதுச்சுடரினை புதுக்குடியிருப்பு பிரதேச வணிகர் சங்க தலைவர் செ.செல்வச்சந்திரன் ஏற்றிவைக்க தொடர்ந்து பொதுப்படங்களுக்கு சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தியுள்ளனர்.

இதன்போது, நினைவுரையினை புதுக்குடியிருப்பில் மாற்றத்திற்காக இளையோர் அமைப்பினை சேர்ந்த அ.அற்புதராசா, புதுக்குடியிருப்பு வணிகர் சங்க தலைவர் செ.செல்வச்சந்திரன் ஆகியோர் நிகழ்த்தியுள்ளனர். இந்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த வணிகர்கள், முச்சக்கர உரிமையாளர் சங்கத்தினர் என பெருமளவானவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top