பூமிக்கு மேல் பல கண்டுபிடிப்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். தற்போது அவர்களது கவனம் பூமிக்கு அடியில் சென்று விட்டதுபோலும். கனடாவின் வான் கூவர் தீவில் 1600 குகைகள் பூமிக்கு அடியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வான் கூவரில் Horne Lake Caves Provincial Park மற்றும் Outdoor Centre என்னும் ஒரு இடம் உள்ளது. புதை படிவங்களும் படிகங்களும் கொண்ட இதுவரை கவனிக்கப்படாத பூமிக்கடியில் உள்ள ஒரு மர்ம உலகம் அது.
35,000 ஆண்டுகள் பழமையான சுண்ணாம்புப் படிவங்கள் அந்தக் குகைகளுக்குள் உள்ளன. பாறைகளுக்கிடையே வளைந்தும் நெளிந்தும் சில இடங்களில் குனிந்தும் தண்ணீருக்குள்ளும் பயணிக்கும் அனுபவம் த்ரில்லாக இருப்பதாகக் கூறுகின்றனர் இங்கு சுற்றுலா வருபவர்கள். பூமிக்கடியில் என்ன உள்ளது என்பதைக் காண விரும்பும் சுற்றுலா விரும்பிகளால் வான் கூவர் தீவு புகழ் பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக மாறி வருகிறது.