News

பெற்ற பிள்ளையின் முன்பு தாயாரை மூர்க்கத்தனமாக தாக்கிய பொலிசார்:

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் பிஞ்சு குழந்தையின் முன்பு அதன் தாயாரை பொலிசார் மூர்க்கத்தனமாக தாக்கியது பார்வையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பிலடெல்பியா நகரில் உள்ள கடற்கரை ஒன்றில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.

20 வயதான இளம் தாயார் Emily Weinman பொலிசாருக்கு எதிராக மது அருந்துவது தொடர்பாக கருத்து கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பொலிசார் அவரை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளதுடன் அவரை கைது செய்துள்ளனர். நடந்த சம்பவத்தை அவரது பிஞ்சு குழந்தை பதற்றத்துடன் பார்த்து நின்றுள்ளது.

குறித்த சம்பவம் நடக்கும் சில நிமிடங்களுக்கு முன்னர் Emily Weinman-ஐ சமீபித்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் அவரிடம் மது அருந்தியுள்ளார என சோதனை செய்துள்ளனர். அதில் அவர் மது அருந்தவில்லை என நிரூபணமானது. மட்டுமின்றி அவர் வைத்திருந்த மது போத்தல்கள் சீல் உடைக்கப்படாமலும் இருந்துள்ளது.

இருப்பினும் குறித்த இளம் தாயாரை பிந்தொடர்ந்த பொலிசாரால் வெறுத்துப்போன அவர், பொலிசாருக்கான வேலையை இவர்கள் எப்போது செய்வார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொலிசார் அவரை வலுக்கட்டாயமாக கைது செய்ய முயன்றுள்ளனர். மட்டுமின்றி அவரை தலையில் முரட்டுத்தனமாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரை கைது செய்துள்ளனர்.

குறித்த காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்க்கவே தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. தற்போது பொலிசார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி Emily Weinman மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top