News

மகள் மற்றும் பேரப்பிள்ளைகளை துப்பாக்கியால் படுகொலை செய்த நபர்: விசாரணையில் அம்பலம்.

அவுஸ்திரேலியாவை உலுக்கிய Margaret River துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அந்த குடும்பத்தின் முதியவரே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த வெள்ளியன்று Osmington பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து 4 சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேரின் சடலம் பொலிசாரால் மீட்க்கப்பட்டது. இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரே இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக பொலிசார் சந்தேகம் எழுப்பினர்.

மட்டுமின்றி குற்றவாளிகள் தொடர்பில் வேறு கோணத்தில் விசாரிப்பதும் வீண் எனவும் தெரிவித்துள்ளனர் மேலும் 61 வயதான Peter Miles என்பவருக்கு சொந்தமான 4 துப்பாக்கிகளையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். குறித்த சம்பவத்தின்போது வெளியே சென்றிருந்த ஆரோன் காக்மான், தமது மனைவி மற்றும் மக்களின் இழப்பால் கடும் துயரத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.

தமது மனைவின் தந்தையான Peter Miles மீது கோபம் இல்லை எனவும், அவரால் தான் தமக்கு இந்த அழகான குடும்பம் அமைந்தது எனவும், தற்போது அவரே அந்த குடும்பம் மொத்தத்தையும் தன்னுடன் எடுத்துச் சென்றிருக்கிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமது பிள்ளைகளின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்துள்ளது. ஆனால் தாம் வாழ்க்கையின் அனைத்தையுமே இழந்து நிர்க்கிறேன் என்றார்.

தமது மாமனாரால் திடீரென்று எடுத்த முடிவாக இது இருக்காது எனவும், பல நாட்கள் திட்டமிட்டே இந்த கொலைவெறி தாக்குதலை நடத்தி இருப்பதாகவும் ஆரோன் காக்மான் தெரிவித்துள்ளார். வெள்ளியன்று காலை தகவல் கிடைத்ததன் அடிப்படையில் விரைந்து வந்த பொலிசார் 4 சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேரின் உடல்களை மீட்டனர். குறித்த கொலைச் சம்பவமானது Osmington பகுதியை உலுக்கியது. கூட்டப் படுகொலைகள் என்பது அவுஸ்திரேலியாவில் மிக அரிதான சம்பவமாகும்.

இதற்கு முன்னர் 1996 ஆம் ஆண்டு Port Arthur பகுதியில் நடந்த கொலைவெறி தாக்குதலில் 35 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். குறித்த கொடூர சம்பவத்திற்கு பின்னர் தாக்குதல் துப்பாக்கிகளுக்கு அரசாங்கம் தடை விதித்ததுடன், சட்ட திருத்தங்களும் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top