India

மக்கள் போராட்டமும்.. மக்களுக்கு கிடைத்த வெற்றியும்.. ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடலும்.. தலைவர்கள் கருத்து..

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணை பிறபித்ததை அடுத்து மாவட்ட ஆட்சியர் அதிகளுடன் சென்று சீல் வைத்துள்ளார். இந்த வெற்றியானது தூத்துக்குடி மக்களின் உயிர் தியாகத்திற்கு கிடைத்துள்ள வெற்றி ஆகும்.100வது நாள் போராட்டத்தின் போது 13 பொதுமக்கள் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்கதக்கது.

இது குறித்து தலைவர்களின் கருத்து

வைகோ கருத்து:
ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அந்நிறுவனம் நினைக்ககூடாது என்று வைகோ கூறியுள்ளார்.ஸ்டெர்லைட் ஆலை மூட தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை வெளியிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது அவர் கூறியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு எக்காரணம் கொண்டும் பாதுகாப்பு தரக்கூடாது என்றும் வைகோ கூறியுள்ளது. ஸ்டெர்லைட்டை மூட தமிழக அரசு அரசாணை வெளியிடுவதுடன் பிரச்சனை முடிந்துவிடாது என்றும் அவர் கூறியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலை மூட தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை வெளியிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.

பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்:
துப்பாக்கிச்சூடு குறித்து உயர்நீதிமன்றமே விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். துப்பாக்கிச்சூடு குறித்து அரசு தரப்பில் உண்மையை தெரிவிக்கவில்லை என்று அவர் புகார் தெரிவி்த்துள்ளார். உயர்நிதிமன்றமே விசாரணைக்கு உத்தரவிட்டால் உண்மை வெளிவரலாம் என்று பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலை மூட தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை வெளியிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் வரவேற்பு:
ஸ்டெர்லைட் ஆலை மூட தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு வரவேற்கப்படுகிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார். நீதிமன்றத்தின் மூலம் ஆலையை திறக்க நீர்வாகத்தை அனுமதித்துவிடக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

சுப.உதயகுமார் வரவேற்பு:
ஸ்டெர்லைட் ஆலை மூட தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை வெளியிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது என்று சுப.உதயகுமார் கூறியுள்ளார்.

பூவுலகின் நண்பர்கள் வரவேற்பு:
ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு காலம் தாழ்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. முன்கூட்டியே அரசு முடிவெடுத்து இருந்தால் 13 பேரின் உயிர் போயிருக்காது என்று சுந்தரராஜன் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் கருத்து:
ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்டது மக்களின் மகத்தான சக்திக்கு கிடைத்த வெற்றி என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தெரிவித்துள்ளார். மக்களின் வெற்றிக்கு முன் அனைத்து அரசியல் கட்சிகளும் தலை வணங்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு தலை வணங்க வேண்டும் என்றும் மக்களிடம் இருந்து பாடம் கற்க வேண்டும் என்றும் கமல் கருத்து தெரிவித்துள்ளார்.

சரத்குமார் வரவேற்பு:
தமிழக அரசினால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவது பாராட்டத்தக்கது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். ஆலை மூடுவதற்கு எதிர்ப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு மக்கள் தங்கள் தன்னலமற்ற மற்றும் உன்னதமான சண்டைகள் தான் காரணம் என கூறி வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

கி.வீரமணி கருத்து:
ஸ்டெர்லைட் மூடப்பட்டதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை தற்காலிக வெற்றி என்று கி.வீலமணி கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கருத்து:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு நிரந்தமாக சீல் வைக்கப்பட்டதை தொடர்ந்து ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். இந்த வெற்றி போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மாக்களுக்கு சமர்ப்பணம் என்றும் அப்பாவி மக்களின் ரத்த குடித்த இதுபோன்ற போராட்டங்கள் வரும்காலங்களின் தொடரக்கூடாது என இறைவனை வேண்டுவதாக ரஜினி வெளியிட்டுள்ள விடியோபதிவில் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top