News

மன்னாரில் முன்னாள் போராளி மரணம்…

மன்னார் வைத்தியசாலையில் முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் ராமச்சந்திரன்(தேவா ) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 1991ஆம் ஆண்டு மன்னார் பகுதியில் இலங்கை இராணுவத்தினரின் நேரடி மோதலின் போது இவரின் முள்ளந்தண்டு பகுதி பாதிக்கப்பட்டு இடுப்புக்கு கீழ் உணர்வில்லாமல் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

எனினும், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மன்னார் வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top